“பிளாஸ்டிக் இல்லா நீலகிரியை உருவாக்க வேண்டும்’
பிளாஸ்டிக் இல்லா மாவட்டமாக நீலகிரியை உருவாக்க வேண்டும் என நீலகிரி ஆட்சியர் அர்ச்சனா பட்நாயக் பேசினார்.
1. புளூ மவுண்டன் நுகர்வோர் பாதுகாப்புக் குழு சார்பில் நுகர்வோர் பாதுகாப்பு தின நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பாதுகாப்புக் குழுத் தலைவர் பசுவையா தலைமை வகித்தார். தொழிலதிபர் போஜராஜன் முன்னிலை வகித்தார். செயலரும், மாநில துணை தலைவருமான பி.ராஜன் வரவேற்றார்.
2. இதில், “பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் நலம் பேணல் சட்டம்-2007′ என்ற புத்தகத்தை ஆட்சியர் வெளியிட, அதை முன்னாள் டி.எஸ்.பி. தர்மராஜ் பெற்றுக் கொண்டார். ஆட்சியர் பேசியது:பிளாஸ்டிக் இல்லா மாவட்டமாக நீலகிரியை உருவாக்க வேண்டியது பொதுமக்களின் கடமை. சுற்றுச் சூழல் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி, மாநிலத்திலேயே முதன்மை மாவட்டமாக நீலகிரியை மாற்ற அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார்.÷நிகழ்ச்சியில் பேரூராட்சித் தலைவர் சை.வாப்பு, கோத்தகிரி ஊராட்சித் தலைவர் மனோகரன், மாவட்ட போக்குவரத்து அலுவலர் வெங்கட்ராமன், மாவட்ட வழங்கல் அதிகாரி ஜெயராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.