உதகையை தூய்மை நகராட்சியாக மாற்றும் திட்டம் அமல்: ஆட்சியர்
உதகை நகராட்சியை தூய்மையான நகராட்சியாக மாற்றும் திட்டம் செயல்படுத்தப்படும் என ஆட்சியர் அர்ச்சனா பட்நாயக் தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:
1. நீலகிரி மாவட்டத்தில் உதகை, குன்னூர் நகராட்சிகளில் நிலவும் வாகன நிறுத்துமிட பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணப்படும். உதகை நகராட்சியை தூய்மையான நகராட்சியாக மாற்றும் திட்டம் செயல்படுத்தப்படும். மேட்டுப்பாளையம் முதல் கக்கநள்ளா வரையிலான தேசிய நெடுஞ்சாலையை கோடை சீசனுக்குள் சீரமைக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.
2. நீலகிரி மாவட்டத்தில் விவசாய நிலங்களில் மண் பரிசோதனை செய்ய நடமாடும் மண் பரிசோதனைக் கூடம் விரைவில் அமைக்கப்படும்.
3. பின்தங்கிய பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள உதகை, கோத்தகிரி வட்டாரப் பகுதிகளை மேம்படுத்தவும், மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும் மாநில திட்டக் குழுவின் நிதி பயன்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.