இலவச தொழில் மேம்பாட்டு பயிற்சிக்கான பயனாளிகள் தேர்வு முகாம்
சாத்தூர் நகராட்சி பொன்விழா ஆண்டு, நகர்புற வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் இலவச தொழில் மேம்பாட்டு பயிற்சிக்கான பயனாளிகள் தேர்வு முகாம் நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் நகராட்சி பொன்விழா ஆண்டு நகர்புற வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் இலவச தொழில் திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான பயனாளிகள் தேர்வு முகாம் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இம்முகாமில் கணினி பயிற்சிக்கு 152 விண்ணப்பங்களும், இலகு ரக வாகன ஒட்டுநர் பயிற்சிக்கு 168 விண்ணப்பங்களும், தையல் பயிற்சிக்கு 34 விண்ணப்பங்களும் பெறபட்டன. இம்முகாமினை நகராட்சி ஆணையாளர் அலாவுதீன் தொடக்கி வைத்தார்.
இதில் நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முகாம் ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளர்கள் சீனிவாசன், திருப்பதி மற்றும் சமுதாய அமைப்பாளர் கீதா ஆகியோர் செய்திருந்தனர்.