தினமணி 18.04.2013
விதிமீறல் கட்டடத்துக்கு “சீல்’
மதுரை விநாயகர் நகரில் சாருமதி என்பவர் தரைத்தளத்துடன் கூடிய 2 மாடி, சுமார் 5 ஆயிரம் சதுர அடியில் கட்டியுள்ளார்.
இதற்கு, மாநகராட்சியில் 2 ஆயிரம் சதுர அடிக்கு மட்டுமே அனுமதி பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த விதிமீறல் தொடர்பாக விளக்கம் கேட்டு உள்ளூர் திட்டக் குழுமத்திலிருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. உரிமையாளரிடமிருந்து பதில் வராத நிலையில், புதன்கிழமை உள்ளூர் திட்டக்குழும உறுப்பினர் செயலர் சங்கரமூர்த்தி, உதவி இயக்குநர் மரியதாசன், மேற்பார்வையாளர் ரவி, முதன்மை நகரமைப்பு அலுவலர் ராக்கப்பன் ஆகியோர் அக்கட்டடத்துக்கு “சீல்’ வைத்தனர்.