தேசிய அடையாள அட்டைக்குபோட்டோ எடுக்க சிறப்பு முகாம்
சிவகங்கை:””சிவகங்கையில், தேசிய அடையாள அட்டைக்கு (ஆதார்) புகைப்படம் எடுக்காதவர்களுக்கு, இன்று முதல் இரண்டு நாட்கள் சிறப்பு முகாம் நடைபெறும்,” என, நகராட்சி தலைவர் அர்ச்சுனன் தெரிவித்தார். அவர் கூறியதாவது: சிவகங்கை நகரில், தேசிய அடையாள அட்டைக்கு புகைப்படம், கண், புருவம் எடுத்தல், கைரேகை சேகரித்தல் போன்ற பணிகள், ஒவ்வொரு வார்டு வாரியாக நடத்தப்பட்டன. போட்டோ எடுக்காதவர்களுக்கு, இரண்டாவது தவணையாக வாய்ப்பு அளிக்கப்படுகிறது.
இது வரை, அடையாள அட்டைக்கு போட்டோ எடுக்காதோருக்கு, இன்றும், (ஏப்.,20, 21) நாளையும் இரண்டு நாட்கள் சிறப்பு முகாம் நடக்கிறது. சிவகங்கை மன்னர் மேல்நிலைப்பள்ளி, செந்தமிழ்நகர் ஆக்ஸ்வர்டு நர்சரி பள்ளி, தொண்டி ரோடு அங்கன்வாடி மையம், நடேசன் செட்டியார் நடுநிலைப்பள்ளி, மன்னர் துரைசிங்கம் அரசு கல்லூரி ஆகிய மையங்களில் தேசிய அடையாள அட்டைக்கு போட்டோ எடுக்கப்படும். பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளவும், என்றார்.