“குடிநீர் தட்டுப்பாடு: 1299-ல் புகார் தெரிவிக்கலாம்’
குடிநீர் தட்டுப்பாடு இருந்தால், தேசிய ஊரக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் உள்ள 1299 என்ற இலவச தொலைபேசி எண்ணில் பொதுமக்கள் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் லி. சித்ரசேனன் அறிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பருவமழை சரிவர பெய்யாததால் தண்ணீர் தட்டுப்பாட்டைப் போக்கத் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். எனவே மாவட்டத்தில் தண்ணீர் தட்டுப்பாட்டை நீக்க போர்கால நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது குறித்து ஊராட்சித் தலைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாவட்டத்தின் சில இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதாகக் கருதப்படுகிறது. இது போன்ற தட்டுப்பாடு இருப்பின் அந்தந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் 94449 91481, 74026 06005, 74026 06003 ஆகிய செல்போன் எண்களிலோ அல்லது தேசிய ஊரக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் உள்ள 1299 என்ற இலவச அழைப்பு தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் எனச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.