பதாகைகள் வைக்க 7 நாள்கள் மட்டுமே அனுமதிவிழுப்புரம்
விக்கிரவாண்டி பகுதியில் ஒரு நிகழ்ச்சிக்காக ஏழு நாள்கள் மட்டுமே பதாகைகள் வைப்பதற்கு அனுமதி அளிக்கப்படும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
விக்கிரவாண்டியில் பதாகைகள் வைப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு ஆய்வாளர் குமார் தலைமை தாங்கினார். உதவி ஆய்வாளர் அரிகரசுகன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் அறிவிக்கப்பட்டவை:
விக்கிரவாண்டியில் எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் ஏழு நாள்களுக்கு முன்னதாகவே பதாகைகள் வைக்க அனுமதி பெற வேண்டும். நிகழ்ச்சிக்கு மூன்று நாள்கள் முன்னதாகவும், மூன்று நாள்களுக்கு பிறகும் மற்றும் நிகழ்ச்சி நடைபெறும் நாளுடன் சேர்த்து மொத்தம் ஏழு நாள்கள் மட்டுமே பதாகைகள் வைக்கப்பட வேண்டும் என்று போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
சிறப்பு உதவி ஆய்வாளர்கள் கோபாலகிருஷ்ணன், ரமேஷ்பாபு, கொளஞ்சிநாதன் மற்றும் அனைத்துக் கட்சி பிரமுகர்கள் உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.