பவானியில் ரூ.61 லட்சத்தில் வளர்ச்சிப் பணி
பவானி நகராட்சிப் பகுதியில், ரூ.61.50 லட்சம் செலவில் படித்துறைகள், உயர்கோபுர மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
பவானி மற்றும் காவிரி ஆறுகளில் மக்கள் பயன்பாட்டுக்கு 9 இடங்களில் ரூ.40.50 லட்சத்தில் படித்துறைகள், ரூ.11 லட்சத்தில் அந்தியூர்-மேட்டூர் பிரிவு, சங்கமேஸ்வரர் கோயில் முன்புறம் என இரு இடங்களில் உயர்கோபுர மின்விளக்குகள் அமைப்பதற்கான நிதியை திருப்பூர் எம்.பி. சிவசாமி ஒதுக்கீடு செய்திருந்தார்.
இதையடுத்து, முடிக்கப்பட்ட பணிகளை ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்ட எம்.பி. சிவசாமி, உயர்கோபுர மின்விளக்கை இயக்கி வைத்தார்.
பவானி நகர்மன்றத் தலைவர் கே.சி.கருப்பணன் தலைமை வகித்தார். நகர அ.தி.மு.க. செயலாளர் என்.கிருஷ்ணராஜ் முன்னிலை வகித்தார்.
நகர்மன்ற துணைத் தலைவர் என்.ராஜேந்திரன், உறுப்பினர்கள் ஏ.சி.முத்துசாமி, மோகன், குருமூர்த்தி, ஆண்டியப்பன், ராஜசேகர், வழக்குரைஞர் செந்தில்குமரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.