தினமணி 21.04.2013
ஏப்ரல் 25-ம் தேதி மாநகராட்சி இயல்புக் கூட்டம்
சேலம் மாநகராட்சியின் இயல்புக் கூட்டம் வரும் 25-ம் தேதி (வியாழக்கிழமை) நடைபெறுகிறது.
மாநகராட்சி மைய அலுவலக கூட்ட அரங்கில் அன்று காலை 11 மணிக்கு நடைபெறும் கூட்டத்துக்கு மேயர் எஸ்.செüண்டப்பன் தலைமை தாங்குகிறார். ஆணையர் மா.அசோகன் முன்னிலை வகிக்கிறார். கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டு பேசவிருப்பதாக மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.