தினமணி 24.04.2013
இன்று மகாவீர் ஜெயந்தி: இறைச்சி கடைகளை மூட உத்தரவு
மாகவீர் ஜெயந்தி தினத்தையொட்டி(ஏப்.24) அனைத்து வகையான இறைச்சிக் கடைகளையும் மூடுமாறு திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து மாநகராட்சி ஆணையர் கே.ஆர்.செல்வராஜ் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி: புதன்கிழமை(ஏப்.24) மகாவீர் ஜெயந்தி கினத்தையொட்டி, இன்றைய தினம் மாநகராட்சி பகுதிகளில் உள்ள ஆடு, மாடு, பன்றி, கோழிக்களை வதைசெய்யவும், அதன் இறைச்சியை விற்பனை செய்யவும் அரசால் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே அனைத்து வகையான இறைச்சிக்கடைகளையும் மூடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மாநகராட்சி செயல்படுத்திவரும் ஆடுவதைக் கூடம் இத்தினத்தில் செயல்படாது. உத்தரவை மீறி இறைச்சி விற்பனை செய்வோர் மீது மாநகராட்சி மூலமாக கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.