ரூ.45லட்சத்தில் பூங்காக்கள்
அனுப்பர்பாளையம்,: ஒருங்கிணைந்த நகர்ப்புற மேம்பாடு மற்றும் திருமுருகன்பூண்டி பேரூராட்சி பொது நிதி திட்டம் ஆகியவற்றின் மூலம் ரூ. 30லட்சம் மதிப்பீட்டில், திருமுருகன்பூண்டி பேரூராட்சி 14ஆவது வார்டு ராக்கியாபாளையம் பகுதியில் அழகிய சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டது.
மேலும், முதலாவது வார்டு தேவராயன்பாளையம் பகுதியில் ஒருங்கிணைந்த நகர்ப்புற மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ரூ.15லட்சம் மதிப்பீட்டில் அழகிய சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டது. இதன் திறப்பு விழா நடைபெற்றது. கலெக்டர் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார்.
அவிநாசி தொகுதி எம்.எல்.ஏ. கருப்பசாமி, திருப்பூர் மாநகராட்சி துணை மேயர் குணசேகரன், முதலாவது மண்டலத்தலைவர் ராதாகிருஷ்ணன்,திரூமுருகன்பூண்டி பேரூராட்சி துணைத்தலைவர் விஸ்வநாதன், பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் கலைவாணன், பேரூராட்சி செயல் அலுவலர் நந்தகோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைச்சர்ஆனந்தன் பூங்காக்களை திறந்து வைத்தார்.
விழாவில், பேரூராட்சி கவுன்சிலர்கள் சண்முகம், ராஜேந்திரன் ,உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.