சரவணம்பட்டியில், அ.தி.மு.க சார்பில் நீர் மோர் பந்தல், தொழிற்சங்கம் பெயர் பலகை திறப்பு மேயர் செ.ம.வேலுசாமி திறந்து வைத்தார்
கோவை மாநகராட்சி 28–வது வார்டு சரவணம்பட்டி பகுதியில் நீர்மோர் பந்தல் மற்றும் ஆட்டோ தொழிற்சங்க பெயர் பலகை திறப்புவிழா நடந்தது. நிகழ்ச்சிக்கு வார்டு கவுன்சிலர் எஸ்.ஆர்.அர்ஜுனன் தலைமை தாங்கினார், கோவை மாநகர மாவட்ட செயலாளரும், மாநகராட்சி மேயருமான செ.ம.வேலுசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நீர்மோர் பந்தலை திறந்து வைத்தார்.
அதைத்தொடர்ந்து சரவணம்பட்டி துடியலூர் சந்திப்பில் புதிதாக அமைக்கப்பட்ட அண்ணா ஆட்டோ ஓட்டுனர் தொழிற்சங்க பெயர் பலகையை அவர் திறந்து வைத்தார். அப்போது ஆட்டோ ஓட்டுனர் தொழிற்சங்க தலைவர் சிவகுமார், செயலாளர் குணசேகரன் ஆகியோர் தலைமையில் 40 ஆட்டோ ஓட்டுனர்கள் சால்வை அணிவித்து வரவேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் கிழக்கு மண்டல தலைவர் கே.ஆர்.ஜெயராம், சுப்பையன். கே.பி.ராஜ், சாரமேடு பெருமாள், ராமசாமி, துரைசாமி, பழனிசாமி, சுபாஷ், ரவி, ராஜேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.