தினமணி 09.05.2013
கோபி நகராட்சி அறிவிப்பு
கோபி நகராட்சிப் பகுதிகளில் குடிநீரைக் காய்ச்சிப் பயன்படுத்துமாறு ஆணையர் பா.ஜான்சன் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவரது அறிக்கை:
÷கோபிசெட்டிபாளையம் அருகிலுள்ள செங்கலக்கரை வழியாகச் செல்லும் பவானி ஆற்றில் இருந்து கோபி நகராட்சிப் பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. தற்போது பவானிசாகர் அணையில் தண்ணீரின் இருப்பு குறைவாக உள்ளதால், அணையில் தேங்கி நிற்கும் தண்ணீர் குடிநீருக்காகத் திறந்துவிடப்படுகிறது. எனவே, பவானி ஆற்றிலிருந்து நகராட்சிப் பகுதிகளுக்கு வினியோகம் செய்யும் குடிநீரை மக்கள் காய்ச்சிப் பயன்படுத்த வேண்டும்.