தினமணி 13.05.2013
தெரு நாய்களுக்கு கருத்தடை
போளூர் பேரூராட்சி நிர்வாகம் சார்பில், தெரு நாய்கள் பிடிக்கப்பட்டு கருத்தடை செய்யப்பட்டன.
சனிக்கிழமை 92 நாய்களும், ஞாயிற்றுக்கிழமை 85 நாய்களும் என 177 நாய்கள் பிடிபட்டன. பின்னர் இவற்றுக்கு கருத்தடை செய்யப்பட்டது. சில நாய்கள் வனத்துறையினர் வசம் ஒப்படைக்கப்பட்டன.
பேரூராட்சி மன்றத் தலைவர் பாபு, செயல் அலுவலர் நிஷாத் ஆகியோர் மேற்பார்வையில் பேரூராட்சிப் பணியாளர்கள் இதற்கான பணியை மேற்கொண்டனர்.