தாராபுரம் நகராட்சியில் கருணை அடிப்படையில் 11 பேருக்கு துப்புரவு பணியாளர் பணிநியமன ஆணை தலைவர், ஆணையாளர் வழங்கினார்கள்
தாராபுரம் நகராட்சியில் கருணை அடிப்படையில் 11 பேருக்கு துப்புரவு பணியாளர் பணிநியமன ஆணைகளை தலைவர், ஆணையாளர் வழங்கினார்கள்.
பணிநியமன ஆணை
திருப்பூர் மண்டலத்திற்கு உட்பட்ட பல்வேறு நகராட்சிகளில் பணியில் இருக்கும்போது மரணம் அடைந்த பணியாளர்களின் வாரிசுதாரர்கள் தங்களுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்க வேண்டும் என்று விண்ணப்பித்து இருந்தனர். இதையடுத்து அவர்களின் மனுவை பரிசீலனை செய்த தாராபுரம் நகராட்சி நிர்வாகம், 6 பெண்கள் உள்பட 11 பேருக்கு பணி வழங்கலாம் என்று திருப்பூர் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனருக்கு பரிந்துரை செய்தது.
இதையடுத்து தாராபுரம் நகராட்சி நிர்வாகத்தின் பரிந்துரையை ஏற்று 11 பேருக்கு பணி நியமன ஆணை வழங்க நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் உத்தரவிட்டார். அதை தொடர்ந்து தாராபுரம் நகராட்சியில் துப்புரவு பணியாளர்களாக பணிபுரிவதற்கான பணி நியமன ஆணையை நகராட்சி தலைவர் கலாவதி, ஆணையாளர் சரவணக்குமார் ஆகியோர் 11 பேருக்கும் வழங்கினார்கள். பணி நியமன ஆணையை பெற்றுக்கொண்ட துப்புரவு பணியாளர்கள் அனைவரும் அரசுக்கு நன்றி தெரிவித்தனர்.
50 காலி இடங்கள்
தாராபுரம் நகராட்சியில் மொத்தம் 151 துப்புரவு பணியாளர்கள் பணியிடங்கள் உள்ளன. இதில் 90 துப்புரவு பணியாளர்கள் பணி புரிந்து வருகிறார்கள்.