தினமணி 22.05.2013
சென்னை மாநகராட்சியின் விரிவாக்கப்பட்ட பகுதிகளிலும் மழைநீர் வடிகால் அமைப்பு கட்டாயம்
சென்னை மாநகராட்சியின் விரிவாக்கப்பட்ட பகுதிகளுக்கும் மழை நீர் கால்வாய் வசதி செய்யப்பட வேண்டும் என்று கூறினார் சென்னை மேயர்.
இன்று சென்னை மாநகராட்சிக் கூட்டத்தில் பேசிய அவர், சென்னையில் முன்னர் மழை நீர் வடிகால் கால்வாய் கட்டாயமாக நடைமுறைப்படுத்தப்பட்டது. அதனால் நிலத்தடி நீர் உயர வழி ஏற்பட்டது. இந்தத் திட்டம் தற்போது, விரிவாக்கப்பட்ட சென்னை மாநகராட்சிப் பகுதிகளுக்கும் பொருந்தும். அதனால், விரிவாக்கப்பட்ட சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் அனைத்து இடங்களிலும் மழை நீர் வடிகால் அமைப்புகளை கட்டாயமாக நடைமுறைப்படுத்த வேண்டும்.
மழைநீர் கால்வாயுடன் கழிவு நீர்க் கால்வாயை இணைத்தால் அந்த இடத்துக்கான உரிமம் ரத்து செய்யப்படும் என்று கூறினார் சென்னை மேயர்.