தினமலர் 24.05.2013
தெரு நாய்களுக்கு நாளை தடுப்பூசி
வெள்ளகோவில்: வெள்ளகோவில் நகராட்சி பகுதியில் வீடுகளில் வளர்க்கப்படும் நாய்கள் மற்றும் தெருக்களில் சுற்றித்திரியும் தெருநாய்களுக்கும், தோட்டங்களில் வளர்க்கப்படும் நாய்களுக்கும் குடும்ப கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை மற்றும் வெறிநாய்க்கடி தடுப்பு ஊசியும், நகராட்சி சார்பில் இலவசமாக போடப்படுகிறது.
நாளை (25ம் தேதி) முதல் வெள்ளகோவில் வாரச்சந்தை வளாகத்தில் தடுப்பூசிகள் போடப்படுகிறது, இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளுமாறும், நகராட்சியின் ஆணையர் செந்தில்குமார், சுகாதார ஆய்வாளர் சுப்பிரமணியன் ஆகியோர் தெரிவித்தனர்.