குடிநீர் தட்டுப்பாடு:பேரூராட்சித் தலைவர் ஆய்வு
செங்கம் அருகே உள்ள கிருஷ்ணாவரம் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு குறித்து பேரூராட்சித் தலைவர் சென்னம்மாள் முருகன் வியாழக்கிழமை ஆய்வு செய்தார்.
கிருஷ்ணாவரம் பகுதியில் கடந்த சில நாள்களாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் செங்கம் பேரூராட்சித் தலைவர் மற்றும் செயல் அலுவலரிடம் மனு கொடுத்தனர்.
அதன் அடிப்படையில் பேரூராட்சித் தலைவர் சென்னம்மாள் முருகன், கிருஷ்ணாவரம் கிராமத்துக்குச் சென்று ஆய்வு செய்தார். இதில் குடிநீர் எடுக்கும் கிணறு வற்றியுள்ளது தெரியவந்தது.
இதையடுத்து, கிணற்றை ஆழப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். அது வரை லாரி மூலம் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என அவர் உறுதியளித்தார். பேரூராட்சி துணைத் தலைவர் பார்த்தசாரதி, கவுன்சிலர் சென்னம்மாள் ராஜமாணிக்கம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.