தினமணி 14.06.2013
தினமணி 14.06.2013
சாலைகளைச் சரிசெய்ய ரூ. 15 கோடி நிதி ஒதுக்கீடு
கோவை மாநகராட்சிப் பகுதியில் பாதாளச் சாக்கடைப்
பணிகள் முடிக்கப்பட்ட இடங்களில் சாலைகளைச் சரி செய்யும் பணிக்கு ரூ. 15
கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
கோவை, பழைய மாநகராட்சிப் பகுதியில் பாதாளச் சாக்கடைப் பணிகள்
பெரும்பாலும் நிறைவு பெற்றுள்ளனன. இப்பகுதிகளில் சாலைகள் தோண்டப்பட்டதால்
பல இடங்களில் குண்டும் குழியுமாக உள்ளன. சாலைகளைச் சரி செய்வதற்காக ரூ. 50
கோடி கேட்டு மாநகராட்சியில் இருந்து அரசுக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதில் முதல் கட்டமாக ரூ. 35 கோடி ஏற்கெனவே வழங்கப்பட்டுவிட்டது. இந்த
நிலையில் ஐயுடிஎம் திட்டத்தின் கீழ் கோவை மாநராட்சிக்கு ரூ. 15 கோடி
வழங்கப்பட்டுள்ளது.
பாதாளச் சாக்கடைக்குத் தோண்டிய இடங்களில் சாலைகளைச் சரி செய்வதற்காக
இத்தொகை வழங்கப்பட்டுள்ளது. மழைக்காலம் முடிந்தவுடன் சாலைகளைச் சரி
செய்யும் பணி துவங்க உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.