தினமணி 15.06.2013
தினமணி 15.06.2013
ரூ.5 லட்சத்தில் மழைநீர் சேகரிப்புப் பணிகள்
திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சியில் ரூ.5
லட்சம் மதிப்பில் மழைநீர் சேகரிப்பு திட்டப் பணிகளை மேற்கொள்வது என
தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருவத்திபுரம் நகர்மன்றத்தின் அவசரக் கூட்டம் வெள்ளிக்கிழமை
நடைபெற்றது. கூட்டத்துக்கு நகர்மன்றத் தலைவர் பாவை ரவிச்சந்திரன் தலைமை
தாங்கினார். ஆணையர் ரமேஷ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், மழைநீர்
சேகரிப்பு மாதிரி கட்டடம் அமைத்தல், செய்யாறில் உள்ள சாலைப் பகுதிகள்,
பூங்கா, பயனற்ற ஆழ்துளைக் கிணறுகள் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர்
சேகரிப்புத் தொட்டிகளை ரூ. 5 லட்சத்தில் மேற்கொள்வது, மழைநீர் சேகரிப்பு
குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது உள்ளிட்ட
தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சுகாதார அலுவலர் பாலசுப்பிரமணியன், இளநிலை பொறியாளர் பாஸ்கர், கட்டட
ஆய்வாளர் கே.சுரேஷ் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து
கொண்டனர்.