தினமணி 15.06.2013
தினமணி 15.06.2013
4 வார்டு துப்புரவுப் பணிகள் தனியார் வசம் அளிப்பு
கரூர் நகராட்சியில் சோதனை அடிப்படையில் 4 வார்டுகளின் துப்புரவுப் பணிகள் தனியார் வசம் அளிக்கப்பட்டுள்ளது.
கரூர் நகராட்சி பகுதியில் துப்புரவு பணிகள் தனியார் நிறுவனம் மூலம்
மேற்கொள்ளப்பட உள்ளது. சோதனை அடிப்படையில் 3,4,5,18 ஆகிய வார்டுகள் சோதனை
அடிப்படையில் துப்புரவுப் பணிகள் மேற்கொள்ள வெள்ளிக்கிழமை தனியார் வசம்
அளிக்கப்பட்டது.
இதை பார்வையிட்ட நகர்மன்றத் தலைவர் எம். செல்வராஜ் கூறியது: முதல்
கட்டமாக தனியார் வசம் அளிக்கப்பட்டுள்ள இந்த 4 வார்டுகளிலும், வீடு,
வீடாகச் சென்று குப்பைகள் சேகரிக்கப்பட்டு, தரம் பிரிக்கப்படும். இந்தப்
பணியில் 50 பேர் ஈடுபட உள்ளனர். இதன் மூலம் நாள் ஒன்றுக்கு 20 மெட்ரிக் டன்
குப்பைகள் சேகரிக்கப்படும். கரூர் நகராட்சி முழுவதும் நாள் ஒன்றுக்கு 130
மெட்ரிக் டன் குப்பை சேகரிக்கப்படுகிறது. சோதனை அடிப்படையில் முதலில் 4
வார்டுகளுக்கு இந்தப் பணி மேற்கொள்ளப்படுகிறது. இதன் பின்னர் மற்ற
வார்டுகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்றார்.
நிகழ்ச்சியில் கரூர் நகராட்சி ஆணையர் (பொ) எல். கோபாலகிருஷ்ணன்,
பொறியாளர் புண்ணியமூர்த்தி, நகர் நல அலுவலர் ஹேமசந்த் காந்தி மற்றும்
வார்டு உறுப்பினர்கள் உடனிருந்தனர்.