தினமணி 18.06.2013
தினமணி 18.06.2013
ரூ.20 லட்சத்தில் குடிநீர்த் திட்டப் பணிகள்
வாணியம்பாடி சட்டப்பேரவைத் தொகுதி மேம்பாட்டு
நிதியிலிருந்து ரூ.20 லட்சத்தில் உதயேந்திரத்துக்கு குடிநீர் வழங்க
அம்பலூர் எக்லாஸ்புரம் பாலாற்றில் 2 ஆழ்துளை கிணறு தோண்டுதல்,
மின்மோட்டார்கள், குடிநீர் குழாய் விஸ்தரிப்பு உள்ளிட்ட பணிகள் மேற்கொள்வது
என பேரூராட்சி மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
உதயேந்திரம் பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சி மன்றத் தலைவர்
ஆ.செல்வராஜ் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டத்தில், இதற்கான முடிவு
எடுக்கப்பட்டது.
திடக் கழிவு மேலாண்மை திட்டத்தில் ஒப்பந்த அடிப்படையில் மகளிர் சுய
உதவிக்குழுவினர் வீடுகள்தோறும் குப்பைகளை சேகரித்து உரம் தயாரிக்க அனுமதி
அளித்தல் உள்பட 11 தீர்மானங்களும் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
பேரூராட்சி மன்றத் துணைத் தலைவர் ஜெகன், செயல் அலுவலர் முஹம்மத் ரிஜ்வான் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.