குடிநீரை வீணாக்கியதால் 5 வீடுகளின் இணைப்பு துண்டிப்பு மாநகராட்சி நடவடிக்கை
திருச்சி
தில்லைநகர் 7வது கிராஸ் பகுதிகளில் மாநகராட்சி கமிஷனர் தண்டபாணி நேற்று
ஆய்வு செய்தார். அப் போது சாஸ்திரி ரோடு பகுதிகளில் உள்ள சில வீடுகளின்
குடிநீர் இணை ப்பு தொடர்பாக ஆய்வு செய்தார். இதில் வழங்கப்பட்ட குடிநீர்
இணைப்பு பிவிசி குழாய்கள் மூலம் வீட்டின் சுற்றுப்புறங்களில்
பயன்படுத்தப்பட்டதும், இதனால் மாநகராட்சிக்கு சொந்தமான சாலைகள் சேதமானதும்
தெரியவந் தது.
இதையடுத்து சம்பந்தப்பட்ட 5 வீடுகளின் குடிநீர் இணைப்பை துண் டிக்க அதிகாரிகளுக்கு கமிஷனர் தண்டபாணி உத்தரவிட் டார்.
மேலும்
மாநகராட்சி பகுதிகளில் மக்களின் அத்தியாவசிய தேவைக்கான குடிநீரை வீண்
செய்வது, மாநகராட்சி சொத்தை சேதப்படுத்துவது கண்டறியப்பட்டாலோ, புகார் வந்
தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கமிஷனர் தண்டபாணி
தெரிவித்துள்ளார்.