தினமணி 19.06.2013
தினமணி 19.06.2013
எளம்பிள்ளை பகுதியில் புதிய குழாய் பதிக்கும் பணி தொடக்கம்
சேலம் மாவட்டம், எளம்பிள்ளை அருகே குடிநீர்க்
குழாயில் சாயக் கழிவுநீர் வந்ததாகக் கூறப்பட்டதையடுத்து, புதிதாக மாற்று
குடிநீர்க் குழாய் அமைக்கும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
எளம்பிள்ளை அருகே உள்ள வேம்படிதாளம், நடுவனேரி, பெருமாகவுண்டம்பட்டி
உள்ளிட்ட பகுதிகளுக்கு எளம்பிள்ளையில் உள்ள மேல்நிலை குடிநீர்த்தேக்கத்
தொட்டியிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு குடிநீர் குழாயில் சாயக் கழிவுநீர் கலந்து வந்தது.
அதைக் குடித்த நடுவனேரி, வேம்படிதாளம் பகுதியைச் சேர்ந்த 20-க்கும்
மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சேலம் அரசு மருத்துவமனை, தனியார்
மருத்துவமனைகளில் சிகிக்சை பெற்றனர்.
இதைத் தொடர்ந்து, அந்தப் பகுதிகளில் சுகாதாரத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின் பேரில், குடிநீர் வடிகால் வாரியம்
சார்பில், எளம்பிள்ளையிலிருந்து பெருமாகவுண்டம்பட்டி, வேம்படிதாளம்,
நடுவனேரி ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பழைய குடிநீர் குழாய்களுக்குப் பதிலாக
புதிய குடிநீர் குழாய்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.