தினத்தந்தி 20.06.2013
ஈரோட்டில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் கலெக்டர் சண்முகம் தொடங்கி வைத்தார்
விழிப்புணர்வு ஊர்வலம்
தமிழகம் முழுவதும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை சீரமைக்கவும்,
மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு இல்லாத கட்டிடங்களில் புதிய கட்டமைப்புகளை
உருவாக்கவும் தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டு உள்ளார்.
அதன்பேரில் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளும் மழைநீர் சேகரிப்பு
விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தி வருகின்றன.
ஈரோடு மாநகராட்சி சார்பில் பொதுமக்களுக்கு மழைநீர் சேகரிப்பு
விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நேற்று விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
கலெக்டர் தொடங்கி வைத்தார்
ஈரோடு மாநகராட்சி அலுவலக வளாகத்தில் இருந்து தொடங்கிய ஊர்வலத்துக்கு
மேயர் மல்லிகா பரமசிவம் தலைமை தாங்கினார். துணை மேயர் கே.சி.பழனிசாமி,
ஆணையாளர் விஜயலட்சுமி, மண்டல தலைவர்கள் ரா.மனோகரன், காஞ்சனா பழனிச்சாமி
ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் ஈரோடு மாவட்ட கலெக்டர் வி.கே.சண்முகம் கலந்து கொண்டு
ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். அவர் பேசும்போது, Ôநிலத்தடி நீர் ஆதாரத்தை
காப்பாற்றும் வகையில் மழைநீர் சேகரிப்பு திட்டம் மாவட்டம் முழுவதும்
நிறைவேற்றப்படும். இதுபற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஊர்வலங்கள்
நடத்தப்பட்டு துண்டு பிரசுரங்கள் வழங்கியும், வீதி நாடகங்கள் நடத்தியும்
பிரசாரம் செய்யப்படும்Õ என்றார்.
துண்டு பிரசுரங்கள்
மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து தொடங்கிய ஊர்வலம் பிரப் ரோடு, சவீதா
சந்திப்பு, எம்.ஜி.ஆர். சிலை, மேட்டூர் ரோடு, சுவஸ்திக் கார்னர், பார்க்
ரோடு வழியாக ஈரோடு வ.உ.சி. பூங்காவில் நிறைவடைந்தது. ஊர்வலத்தில் ஈரோடு
அரசு மகளிர் பள்ளிக்கூடம், மாநகராட்சி காமராஜர் மேல்நிலைப்பள்ளி, ரெயில்வே
காலனி மாநகராட்சி பள்ளிக்கூடம், இடையன்காட்டு வலசு மாநகராட்சி
உயர்நிலைப்பள்ளிக்கூடங் களை சேர்ந்த மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு
பொதுமக்களுக்கு துண்டுபிரசுரங்களை வழங்கினார்கள்.
பல்வேறு கோஷங்கள்
அடங்கிய தட்டிகளை ஏந்திச்சென்றனர். ஊர்வலத்தில் மகளிர் சுயஉதவிக்குழுவினர்,
மாநகராட்சி பணியாளர்களும் கலந்து கொண்டு நடந்து சென்றனர்.
மேயர், துணை மேயர், ஆணையாளர் உள்ளிட்ட அதிகாரிகள் நடந்து சென்ற இந்த
விழிப்புணர்வு ஊர்வலத்தில் மழைநீர் சேகரிப்பு மாதிரி வடிவம் வாகனத்தில்
கொண்டுவரப்பட்டது. ஊர்வலத்தில் மாநகராட்சி செயற்பொறியாளர் ஆறுமுகம், உதவி
ஆணையாளர்கள் அசோக்குமார், விஜயகுமார், ரவிச்சந்திரன், மாநகர நல அதிகாரி
டாக்டர் அருணாதேவி மற்றும் கவுன்சிலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.