தினமணி 25.06.2013
4 இடங்களில் நடைமேம்பாலங்கள்
தினமணி 25.06.2013
4 இடங்களில் நடைமேம்பாலங்கள்
திருச்சி மாநகராட்சிப் பகுதியில் மெயின்கார்டுகேட்,
சிந்தாமணி அண்ணாசிலை, மேலப்புதூர், மத்திய பேருந்து நிலையம்- ஆனந்த்
ஹோட்டல் அருகில் ஆகிய 4 இடங்களில் பொதுமக்களின் வசதிக்காக நடை மேம்பாலங்களை
அமைக்க அரசின் அனுமதியைப் பெற மாநகராட்சி மாமன்றம் ஒப்புதல் திங்கள்கிழமை
ஒப்புதல் வழங்கியது.
இதில், பொது-தனியார் கூட்டாண்மை (பிபிபி) முறையின்படி இந்த
மேம்பாலங்களை அமைத்து, அவற்றில் விளம்பரங்களை அமைத்துக் கொள்ளும் உரிமையை
வழங்கலாம் என்றும் தற்போது திட்டமிடப்பட்டுóள்ளது.
இந்தத் தீர்மானம் மாமன்றக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டபோது, தலைமை
அஞ்சல் நிலையப் பகுதியில் ஒரு சுரங்க நடைபாதை அமைக்க வேண்டும் என கோட்டத்
தலைவர் ஜெ. சீனிவாசன் கோரிக்கைவிடுத்தார்.
அதேபோல, ஜிகார்னர் பகுதியில் பொதுமக்கள் குழப்பத்தால் தொலைதூரம்
கடந்து செல்ல வேண்டிய நிலை இருப்பதால் அங்கும் சுரங்கப் பாதை அமைக்க
நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் சீனிவாசன்.
இந்த இரு கோரிக்கைகள் குறித்தும் பரிசீலிப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.