தினமணி 27.06.2013
குடியாத்தத்தை அடுத்த செருவங்கியில் உள்ள நகராட்சி தொடக்கப் பள்ளியில் ஆங்கிலவழிக் கல்வி புதன்கிழமை துவக்கப்பட்டது.
நகர்மன்றத்
தலைவர் அமுதா சிவப்பிரகாசம் தலைமை வகித்து, ஆங்கிலவழிக் கல்வியை துவக்கி
வைத்துப் பேசினார். கல்விக் குழுத் தலைவர் கௌரி மூவேந்திரன்
குத்துவிளக்கேற்றினார்.
பள்ளித் தலைமையாசிரியை எம். நாகலட்சுமி
வரவேற்றார். வேளாண்மை கூட்டுறவு விற்பனைச் சங்கத் தலைவர் ஜே.கே.என்.பழனி,
உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் எம்.மைக்கேல்தாஸ், எஸ்.சுரேஷ், வட்டார வள
மைய மேற்பார்வையாளர் கே.பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கல்லப்பாடி பள்ளி: குடியாத்தத்தை அடுத்த கல்லப்பாடி ஊராட்சி தொடக்கப் பள்ளியில் ஆங்கில வழிக் கல்வி புதன்கிழமை தொடங்கப்பட்டது.
பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கே.வி. கோவிந்தசாமி தலைமை வகித்தார்.
ஊராட்சித் தலைவர் ஹேமலதா கருணாநிதி குத்துவிளக்கேற்றி, ஆங்கில வகுப்பை தொடங்கி வைத்தார். தலைமையாசிரியை ஜி. சுஜாதா வரவேற்றார்.
உதவி
தொடக்கக் கல்வி அலுவலர்கள் எம். மைக்கேல்தாஸ், எஸ். சுரேஷ், வட்டார வள மைய
மேற்பார்வையாளர் கே. பாபு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.