தினத்தந்தி 28.06.2013
ஆத்தூரில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
ஆத்தூர் அருகே உள்ள நரசிங்கபுரம் நகராட்சி சார்பில் மழைநீர் சேகரிப்பு
குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு மற்றும் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு
ஊர்வலம் நடந்தது. ஆத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து
கொண்ட ஊர்வலம் பள்ளி வளாகத்தில் தொடங்கியது. ஊர்வலத்தை எஸ்.மாதேஸ்வரன்
எம்.எல்.ஏ கொடி அசைத்து தொடங்கி வைத்து ஊர்வலத்தில் நடந்து சென்றார். இதில்
நரசிங்கபுரம் நகரசபை தலைவர் எம்.காட்டுராஜா, ஆத்தூர் துணை போலீஸ்
சூப்பிரண்டு சிவ.வேலப்பன், நகரசபை ஆணையாளர் சித்ரா, பொறியாளர் அம்சா,
கவுன்சிலர்கள் பெருமாள், தேவன், மாலாபாலமுருகன், பெற்றோர் ஆசிரியர் கழக
தலைவர் ஏ.டி அர்ச்சுனன் ஆகியோர் கலந்து கொண்டார்கள். ஊர்வலத்தில் கலந்து
கொண்ட மாணவர்கள் கோஷங்களை எழுப்பியபடி முக்கிய வீதிகள் வழியாக சென்று பள்ளி
வளாகத்தை அடைந்தனர்.