தினமணி 28.06.2013
திடக்கழிவு மேலாண்மைப் பயிற்சி முகாம்
தினமணி 28.06.2013
திடக்கழிவு மேலாண்மைப் பயிற்சி முகாம்
மேட்டுப்பாளையத்தில் மகளிர் சுய உதவிக் குழுவினர் பங்கேற்ற திடக்கழிவு மேலாண்மை குறித்த பயிற்சி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
மேட்டுப்பாளையம் நகராட்சி, சி.எம்.எஸ்.எஸ்.எஸ். தொண்டு நிறுவனம்
மற்றும் சென்னை எக்ஸ்னோரா அமைப்பு சார்பில் புனித அந்தோணியார் ஆலய
வளாகத்தில் நடைபெற்ற இம் முகாமை நகர்மன்றத் தலைவர் சதீஸ்குமார் தலைமை
வகித்து துவக்கி வைத்தார். எக்ஸ்னோரா ஒருங்கிணைப்பாளர் வேலியப்பன் முன்னிலை
வகித்தார். தொண்டு நிறுவன அமைப்பாளர் ஜெகன் ஆண்டனி வரவேற்றார்.
பின்னர் நடைபெற்ற திடக்கழிவு மேலாண்மைப் பயிற்சி முகாமில், குப்பையைத்
தரம் பிரித்து அவற்றை முறையாகக் கையாள்வது குறித்தும், பிளாஸ்டிக்
பொருள்களின் பயன்பாட்டைத் தவிர்ப்பது குறித்தும் பயிற்சி வழங்கப்பட்டது.
இப் பயிற்சியை வேலியப்பன் (எக்ஸ்னோரா), புஷ்பராஜ் (தொண்டு நிறுவனம்)
மற்றும் நகராட்சி சுகாதார ஆய்வாளர் நல்லுசாமி வழங்கினர்.
இதில், சி.எம்.எஸ்.எஸ்.எஸ். தொண்டு நிறுவனத்தின் மகளிர் சுய உதவிக்
குழுக்களைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். சுய
உதவிக்குழு ஒருங்கிணைப்பாளர் புஷ்பராணி நன்றி கூறினார்.