தினகரன் 30.06.2013
மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி
கழுகுமலை, : கழுகுமலை அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் கழுகுமலை பேருராட்சி சார்பில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேருராட்சி தலைவர் சுப்பிரமணியன் பேரணியை துவக்கி வைத்தார். பள்ளி தலைமையாசிரியர் (பொறுப்பு) தமிழரசி முன்னிலை வகித்தார். பள்ளியிலிருந்து புறப்பட்ட பேரணி மேலபஜார், அரண்மனைவாசல் தெரு, தெற்குரதவீதி, கீழபஜார் வழியாக சென்று மீண்டும் பள்ளியை அடைந்தது. பேரணியில் மாணவர்கள் மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய அட்டையை ஏந்தியவாறு கோஷமிட்டபடி சென்றனர். என்.எஸ்.எஸ் திட்ட அலுவலர் பொன்ராஜ்பாண்டியன், உடற்கல்வி இயக்குநர் மயில்சாமி, மற்றும் சாரணர்படை, பசுமைபடை மாணவர்கள் பங்கேற்றனர்.