தினமணி 11.07.2013
வேலூர் மாநகராட்சி சார்பில் பள்ளி மாணவ, மாணவியர்
பங்கேற்ற மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வுப் பேரணியை ஆட்சியர் பொ.சங்கர்
புதன்கிழமை தொடங்கி வைத்தார்.
இப்பேரணியில் வெங்கடேஸ்வரா மேல்நிலைப்
பள்ளி, ஈ.வெ.ரா. நாகம்மையார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, ஊரிசு ஆண்கள்
மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றைச் சேர்ந்த மாணவ, மாணவியர் 500-க்கும்
மேற்பட்டோர் மழைநீர் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய தட்டிகளை தாங்கி
பங்கேற்றனர்.
முக்கிய வீதிகள் வழியாக சென்ற பேரணி மீண்டும்
மாநகராட்சியை வந்தடைந்தது. பேரணியில் மழைநீர் கட்டமைப்பு மாதிரி
வடிவத்துடன் கூடிய மினி லாரி இடம்பெற்றது. அத்துடன் விழிப்புணர்வு துண்டுப்
பிரசுரங்களும் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டன.
மாநகர மேயர்
பி.கார்த்தியாயினி, பொறியாளர் தேவகுமார், நகரமைப்பு ஆய்வாளர் வெங்கடேசன்,
மண்டலக்குழு தலைவர் எஸ்.குமார், நகரமைப்புக் குழுத் தலைவர் அன்பு
உள்ளிட்டோர் பங்கேற்றனர்.