தினமணி 17.07.2013
கோவை மாநகராட்சியில் 10 இடங்களில் உள்ள “அம்மா’ உணவகங்களில் இதுவரை 5 லட்சம் இட்லிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
கோவை மாநகராட்சியில் 10 இடங்களில் “அம்மா’ உணவகங்கள் கடந்த ஜூன் 2-ஆம்
தேதி முதல்வர் ஜெயலலிதாவால் துவக்கி வைக்கப்பட்டது. இங்கு காலையில்
இட்லியும் மதியம் சாம்பார் மற்றும் தயிர் சாதம் வழங்கப்படுகிறது.
உணவகம் துவங்கப்பட்ட நாள்முதல் கடந்த சனிக்கிழமை (ஜூலை 13) வரை 10
உணவகங்களிலும் 5.02 லட்சம் இட்லிகளும், 2.54 லட்சம் சாதங்களும் விற்பனை
செய்யப்பட்டுள்ளன.
“அம்மா’ உணவகங்களில் சுகாதாரம், வழங்கப்படும் உணவின் தரம் மற்றும் அளவு
ஆகியவற்றை மாநகர நல அலுவலர், உதவி மாநகர நல அலுவலர் மற்றும் 30
மருத்துவர்கள் கொண்ட குழுவினர் தொடர்ந்து கண்காணிப்பதாக மாநகராட்சி
ஆணையாளர் க.லதா தெரிவித்துள்ளார்.