தினமணி 17.07.2013
தினமணி 17.07.2013
பெங்களூர் மாநகராட்சி அதிகாரிகள் பணியிட மாற்றம்
பெங்களூர் மாநகராட்சியில் வருவாய்த் துறையில் பணிபுரிந்த 420 அதிகாரிகள், ஊழியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
பெங்களூர் ஏரோஹள்ளி துணை மண்டலத்தில் அதிகாரிகள் செய்த முறைகேடுகளால் பெங்களூர் மாநகராட்சிக்கு பல கோடி இழப்பு ஏற்பட்டது.
இதனால், வேறு துறைகளிலிருந்து மாநகராட்சி வருவாய் துறைக்கு வந்து 3
ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் அதிகாரிகள், ஊழியர்கள் 420 பேரை ஆணையர்
லட்சுமி நாராயணா ஒரே நாளில் பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டார்.
மாநகராட்சி வரலாற்றில் இது போன்று ஒரே நாளில் 420 பேரை பணியிடம் மாற்றி
உத்தரவிட்டுள்ளது முதல் முறை என கூறப்படுகிறது. இதனால், மாநகராட்சியில்
மற்ற துறைகளில் பணிபுரியும் அதிகாரிகள், ஊழியர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.