தினமணி 05.08.2013
தினமணி 05.08.2013
மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
ஆற்காட்டை அடுத்த விளாப்பாக்கம் பேரூராட்சியில்
மழைநீர் சேகரிப்பு மற்றும் டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
சனிக்கிழமை நடைபெற்றது.
பேரூராட்சி மன்றத் தலைவர் செல்வி ராமசேகர் தலைமை தாங்கினார். செயல் அலுவலர் சரவணன் முன்னிலை வகித்தார்.
ஆற்காடு ஸ்ரீமகாலஷ்மி மகளிர் செவிலியர் கல்லூரி மற்றும் செவிலியர்
பயிற்சி பள்ளி மாணவிகள் கலந்து கொண்டு முக்கிய வீதிகள் வழியாக பதாகைகளை
ஏந்திச் சென்றனர்.
இதில் கல்லூரி முதல்வர் வனிதாதேவி, மருத்துவ அலுவலர் டாக்டர் ஷர்மி, சுகாதார ஆய்வாளர் பழனி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.