தினத்தந்தி 06.08.2013
650 மாணவ–மாணவிகளுக்கு விலையில்லா லேப்–டாப் மேயர் கார்த்தியாயினி வழங்கினார்

காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைபள்ளி, அரசு
ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் பிளஸ்–2 முடித்த
மாணவ–மாணவிகளுக்கு அரசின் விலையில்லா லேப்–டாப் வழங்கும் விழா அரசு ஆண்கள்
பள்ளியில் நடந்தது. விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர்கள் செல்வராணி,
ஆனந்தநாயுடு ஆகியோர் தலைமை தாங்கினர். பள்ளி வளர்ச்சி குழுத்தலைவர்
எஸ்.ஆர்.கே. அப்பு முன்னிலை வகித்தார்.

வட்டார கல்விக்குழு உறுப்பினர்
கோரந்தாங்கல் ஏ.குமார் வரவேற்றார். 650 அரசு பள்ளி மாணவ–மாணவிகளுக்கு
வேலூர் மாநகராட்சி மேயர் கார்த்தியாயினி அரசின் விலையில்லா லேப்–டாப்களை
வழங்கி பேசினார். முடிவில் ஆசிரியர் க.ராஜா நன்றி கூறினார்.