தினகரன் 06.08.2013
மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி
அந்தியூர்: அந்தியூர் பேரூராட்சி நிர்வாகம் சார்பில், மழைநீர் சேகரிப்பு பற்றிய விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரூராட்சி அலுவலகத்திலிருந்து துவங்கிய பேரணியை, எம்.எல்.ஏ., ரமணீதரன் துவக்கி வைத்தார். அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பேரணியில் பங்கேற்று விழிப்புணர்வு கோஷம் எழுப்பினர். ஒன்றிய அதிமுக செயலாளர் செல்வராஜ், ஊராட்சி தலைவர் மீனாட்சி சுந்தரம், துணைத் தலைவர் சிவக்குமார், மாவட்ட மாணவரணி தலைவர் சண்முகானந்தம், கவுன்சிலர் குருராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இதேபோல, அத்தாணி பேரூராட்சி நிர்வாகம் சார்பில் நடந்த விழிப்புணர்வு பேரணியை, தலைவர் செந்தில்கணேஷ் துவக்கி வைத்தார். அத்தாணி அரசு பள்ளியில் படிக்கும் 100க்கும் மேற்பட்டோர் பேரணியில் கலந்து கொண்டனர். நால்ரோடு, சந்தைபேட்டை வழியாக பேரணி பள்ளி வளாகத்தை வந்தடைந்தனர். வார்டு கவுன்சிலர்கள், பொதுமக்கள் பேரணியில் பங்கேற்றனர்.