மாலை மலர் 07.08.2013

அழகுப்படுத்தும் வகையில் மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு
வருகிறது. கிரானைட் மற்றும் கான்கிரீட் நடைபாதைகள் அமைக்க
திட்டமிடப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி நடைபாதையில் நடந்து செல்ல ஏதுவாக நடைபாதை அமைக்க பிரத்யேகமான வடிவமைப்புகள் செய்யப்பட்டுள்ளன.
நடைப்பாதைகளில் ஓரத்தில் இடவசதி உள்ள சாலைகளில் சைக்கிள் பாதைகள் அமைக்கவும் மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
மெரீனா
கடற்கரையை அழகுப்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவரும்
மாநகராட்சி அங்குள்ள கடைகளை ஒழுங்குப்படுத்தியுள்ளது. உழைப்பாளர் சிலையில்
இருந்து கலங்கரை விளக்கம் வரை கடைகள் முறைப்படுத்தப்படுகின்றன. மெரீனா
கடற்கரை சாலையை ஒட்டியுள்ள சீனிவாசபுரத்தில் சைக்கிள் செல்ல தனிப்பாதை
அமைக்கப்படுகிறது.
கலங்கரை விளக்கத்தில் இருந்து 7 கிலோ மீட்டர்
தூரத்திற்கு சைக்கிளில் செல்பவர்கள் வசதிக்காக இது உருவாக்கப்படுகிறது.
அழகிய செயற்கை நீர்வீழ்ச்சி கான்கிரீட் ரோடு, நடைபாதை, புல்தரைகள் போன்றவை
உருவாக்கப்படுகிறது.
மாநகராட்சி அறிவித்த இந்த திட்டப்பணி விரைவில்
தொடங்கப்பட உள்ளது. பல்வேறு கட்டங்களாக நடைபெற உள்ள இந்த பணி குறித்து
அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.
கலங்கரை விளக்கத்தில்
இருந்து சீனிவாசபுரம் செல்லும் அந்த சாலை போக்குவரத்து நெரிசலை குறைக்கும்
வகையில் பள்ளி, கல்லூரி பஸ்கள், கார், வேன் போன்ற வாகனங்கள் செல்ல
பயன்படுகிறது.
சாலையில் ஓரமாக சிறு சிறு மீன் கடைகள் செயல்படுகின்றன.
அங்குள்ள கடற்கரை பகுதியில் பொதுமக்கள் சமீபகாலமாக கூடுவதால் இருசக்கர
வாகனங்களும் ஏராளம் நிறுத்தப்படுகின்றன.
அந்த பகுதியில் சைக்கிள் செல்ல தனிப்பாதை அமைத்தால் விபத்தில் சிக்காமல் சைக்கிளில் செல்பவர்கள் எளிதாக செல்ல முடியும்.
மெரீனாவை அழகுப்படுத்தும் வகையில் இந்த திட்டத்தை சென்னை மேயர் சைதை துரைசாமி செயல்படுத்துகிறார்.