தினமணி 07.08.2013
பெரியகுளம் அருகே உள்ள தேவதானப்பட்டி பேரூராட்சியில் மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.
பேரூராட்சித் தலைவர் கே. குணசேகரன் பேரணிக்கு தலைமை வகித்தார்.
துணைத் தலைவர் பி.ஆர்.ராஜேந்திரன், செயல் அலுவலர் எம்.தாமரை ஆகியோர்
முன்னிலை வகித்தனர். கவுன்சிலர்கள் உள்பட பேரூராட்சி அலுவலகப் பணியாளர்கள்,
முக்கியப் பிரமுகர்கள் மற்றும் தேவதானப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி
என்.சி.சி. மாணவர்கள், ஆசிரிய, ஆசிரியைகள் உள்பட ஏராளமானோர் கலந்து
கொண்டனர். மழைநீர் சேகரிப்பின் அவசியம் குறித்த பதாகைகளுடன் பேரணியில்
கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதுகுறித்த துண்டுப் பிரசுரங்கள்
விநியோகிக்கப்பட்டன. பேரணி சென்ற வழியில் உள்ள வீடுகளில் மழைநீர் சேகரிப்பு
குறித்த ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன. பேரூராட்சி அலுவலகம் முன் பேரணி
தொடங்கி முக்கிய வீதிகள் வழியாகச் சென்றது.