தினத்தந்தி 14.08.2013
திருப்பூரில் மளிகை, பேக்கரி கடைகளில் 15 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
அதிரடி சோதனை நடத்தி அங்கிருந்து 15 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல்
செய்தனர்.
பிளாஸ்டிக் பைகள்
40 மைக்ரானுக்கு குறை வான பிளாஸ்டிக் பைகள் மற்றும் ஒருமுறை மட்டுமே
உபயோகப்படுத்தும் பிளாஸ் டிக் குவளை போன்றவற்றை விற்பனை செய்யவும், பயன்
படுத்தவும் தமிழக அரசு தடை விதித்துள்ளது. ஆனால் திருப்பூரில் வியாபாரிகள்
தடைசெய்யப்பட்ட பிளாஸ் டிக் பைகளை தாராளமாக பயன்படுத்தி வருகிறார்கள்.
கடைகளில் இருந்து இந்த பைகளை வாங்கி வரும் பொதுமக்கள் அவற்றை முறைப்படி
அழிக்காமல் சாக் கடைகளில் வீசி எறிகிறார்கள். இதனால் சாக்கடைகளை அடைத்து
கொள்கின்றன. இதனால் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் தேங்கி நிற்கின் றன.
இதனால் சுகாதாரம் கேள்விக்குறியாக மாறியுள்ளது.
அதிரடி சோதனை
இந்த நிலையில் திருப்பூர் மாநகர் நல அதிகாரி டாக்டர் செல்வக்குமார்
தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் ராம கிருஷ்ணன், முருகன் மற்றும்
சுகாதாரபிரிவு அதிகாரிகள் நேற்று திருப்பூர் கல்லூரி சாலை, அவினாசி ரோடு
ஆகிய பகுதிகளில் 40-க்கும் மேற்பட்ட கடைகளில் அதி ரடி சோதனை மேற்கொண் டனர்.
இதில் மளிகை கடைகள், பேக்கரி கடைகள் மற்றும் ஓட்டல்களில் 40
மைக்ரானுக்கும் குறைவாக உள்ள பிளாஸ்டிக் பைகள், ஒருமுறை பயன்படுத்தும்
பிளாஸ்டிக் குவளைகள், தட் டுகள், கிண்ணங்கள் ஆகி யவை பயன்படுத்தப்படுவது
கண்டு பிடிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து இந்த கடைகளில் இருந்து மொத்தம் 15 கிலோ எடையுள்ள
பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்த னர். மேலும், கடைகளில்
தொடர்ந்து இந்த ஆய்வு நடைபெறும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள்
விற்பது கண்டுபிடிக்கப்பட் டால் அவற்றை பறிமுதல் செய்து, அபராதம் விதிக்கப்
படுவதுடன் அவர்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று மாநகர் நல அதிகாரி
டாக்டர் செல்வக்குமார் தெரிவித்தார்.