தினத்தந்தி 17.08.2013
சோளிங்கர் அரசினர் மேல்நிலை பள்ளியில் 388 மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி பேரூராட்சி மன்ற தலைவர் வழங்கினார்
சோளிங்கரில் உள்ள எத்திராஜம்மாள் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில்
தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா பள்ளி வளாகத்தில்
நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் என்.விசாகமூர்த்தி தலைமை
தாங்கினார். நகர அ.தி.மு.க. செயலாளர் ராமு, பேரூராட்சி உறுப்பினர்கள்
சீனிவாசன், மணிகண்டன், பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர்
பார்த்திபன் வரவேற்று பேசினார்.
சிறப்பு அழைப்பாளராக சோளிங்கர் பேரூராட்சி மன்ற தலைவர் ஏ.எல்.விஜயன்,
ஒன்றிய அ.தி.மு.க. அவைத்தலைவர் ஏ.எல்.சாமி ஆகியோர் கலந்து கொண்டு 388
மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகளை வழங்கி பேசினர். விழாவில்
ஏ.எல்.சாமி குடும்பத்தினர் சார்பில் ஆண்டுதோறும் 6 முதல் 12–ம் வகுப்பு வரை
தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு வழங்கப்படும் கேடயம்
வழங்கப்பட்டது.
விழாவில் மாணவிகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்குவதற்காக
பேரூராட்சி மன்ற தலைவர் ஏ.எல்.விஜயன் ரூ.1 லட்சம் நன்கொடை வழங்கினார்.
இதில் பள்ளி ஆசிரியைகள், மாணவிகள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். முடிவில் துணை தலைமை ஆசிரியர் எஸ்.ராகவன் நன்றி கூறினார்.