தினமணி 17.08.2013
தினமணி 17.08.2013
ரூ.1500 கோடியில் மாணவர்களுக்கு மடிக்கணினி
கல்லூரி, மாணவர்களுக்கு ரூ.1500 கோடி மதிப்பிலான
மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளதாக பொன்னேரியில் அரசு பெண்கள் மேல்நிலைப்
பள்ளியில் மடிக்கணினி வழங்கும் விழாவில் அமைச்சர் பி.வி ரமணா கூறினார்.
பொன்னேரியில் உள்ள அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 2
மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற மடிக்கணினிகள் வழங்கும் விழாவுக்கு பொன்னேரி எம்.எல்.ஏ. பொன்.ராஜா தலைமை வகித்தார்.
திருவள்ளூர் எம்.பி. வேணுகோபால், பூந்தமல்லி எம்.எல்.ஏ. மணிமாறன்,
மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் கலைச்செல்வி மோகனவடிவேல்,
பொன்னேரி பேரூராட்சித் தலைவர் தனலட்சுமி மோகனசுந்தரம் ஆகியோர் முன்னிலை
வகித்தனர். பள்ளித் தலைமை ஆசிரியர் திருவள்ளுவன் வரவேற்றார். விழாவில்
சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் பி.வி
ரமணா 574 மடிக்கணிகளை மாணவிகளுக்கு வழங்கி பேசியது:
மாணவர்கள் அறிவு வளர்ச்சியை கருத்தில் கொண்டு கடந்த ஆண்டு ரூ.1500 கோடி செலவில் மடிக்கணிகள் வழங்கப்பட்டுள்ளன.
அதே போன்று இந்த ஆண்டும் மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டு வருகின்றன என்றார் அவர்.
இதே போன்று பொன்னேரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற
மடிக்கணினி வழங்கும் விழாவில் 343 மாணவர்களுக்கு மடிக்கணிகளை அமைச்சர்
வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், ஆண்கள் மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் விஜயராகவன்,
பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் செல்வகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.