தினத்தந்தி 19.08.2013
பொது இடத்தில் குப்பை கொட்டினால் ரூ.500 அபராதம் மாநகராட்சி எச்சரிக்கை
குப்பைத் தொட்டிகள்
இது குறித்து மாநகராட்சி கமிஷனர் நந்தகோபால் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–
மதுரை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில்
உள்ள தெருவோரக் கடைகள், வியாபார நிறுவனங்கள் மற்றும் வீடுகளில் சேரும்
குப்பைகளை அந்தந்த பகுதிகளில் உள்ள குப்பைத் தொட்டிகள் மற்றும் குப்பை
வண்டிகளில் மட்டுமே கொட்ட வேண்டும்.
அபராதம்
அப்படி இல்லாமல் பொது இடங்கள் மற்றும்
கழிவுநீர் கால்வாய்களில் குப்பைகளை கொட்டுபவர்களுக்கு அபராதம்
விதிக்கப்படும். இதை மீறி தெருவில் குப்பை கொட்டினால், முதல் தடவை
ரூ.500–ம், இரண்டாம் தடவை ரூ.1000மும் என அபராதம் விதிக்கப்படும்.
எனவே தெருவோரக் கடைக்காரர்கள், வியாபார
நிறுவனத்தினர் மற்றும் பொது மக்கள் அன்றாடம் சேரும் குப்பைகளை கண்ட
இடங்களில் கொட்டாமல் சேகரித்து அந்தந்த தெருக்களில் உள்ள குப்பைத்
தொட்டிகள் மற்றும் மாநகராட்சி குப்பை வண்டிகளில் கொட்ட வேண்டும். இவ்வாறு
அதில் கூறப்பட்டுள்ளது.