தினத்தந்தி 19.08.2013
பனமரத்துப்பட்டி–மல்லூர் பேரூராட்சிகளில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி பேரூராட்சியில் மழை நீர் சேகரிப்பு
குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. இந்த ஊர்வலத்தை பேரூராட்சி தலைவர்
பெரியசாமி, துணை தலைவர் பாலசந்திரன் ஆகியோர் தொடங்கி வைத்தார்கள்.
ஊர்வலத்துக்கு செயல் அலுவலர் பிரபுதாஸ் தலைமை தாங்கினார். இதில் பள்ளி
மாணவர்கள் கலந்து கொண்டு மழைநீர் சேகரிப்பு கோஷங்களை எழுப்பியபடி முக்கிய
வீதிகள் வழியாக சென்றார்கள்.
இதேபோல மல்லூர் பேரூராட்சியில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
நடந்தது. ஊர்வலத்துக்கு பேரூராட்சி செயல் அலுவலர் முத்துசாமி தலைமை
தாங்கினார். பேரூராட்சி தலைவர் கிருஷ்ணமூர்த்தி, துணை தலைவர் அய்யனார்
ஆகியோர் தொடங்கி வைத்தார்கள். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள்
மற்றும் பேரூராட்சி உறுப்பினர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் உள்பட பலர்
கலந்து கொண்டார்கள்.