தினமணி 20.08.2013
தினமணி 20.08.2013
திருத்தங்கல் குடிநீர் இணைப்பில் கண்ட்ரோல் வால்வு அமைக்க முடிவு
திருத்தங்கல் நகராட்சியில் குடிநீர் இணைப்புகளில்
புளோ கண்ட்ரோல் வால்வுகள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என நகர்மன்றத்
தலைவர் க.தனலட்சுமி, துணைத்தலைவர் பொ.சக்திவேல் ஆகியோர் தெரிவித்தனர்.
திருத்தங்கல் நகராட்சியில் உள்ள 21 வார்டுகளில் 3400 குடிநீர்
இணைப்புகள் உள்ளன. மானூர் குடிநீர் திட்டத்தின்கீழ் நகராட்சிக்கு தினசரி 25
லட்சம் லிட்டர் தண்ணீர் வழங்கப்பட வேண்டும். ஆனால் தற்போது தினசரி 12
லட்சம் முதல் 14 லட்சம்
லிட்டர் தண்ணீர்தான் வழங்கப்பட்டு வருகிறது. எனவே 7 நாளைக்கு ஒருமுறை
குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் குடிநீர் இணைப்பில் பலர்
மின்மோட்டார் வைத்து தண்ணீர் எடுப்பது தெரியவந்தது. இதையடுத்து நகராட்சி
அலுவலர்கள் திடீர் சோதனை நடத்தி, குடிநீர் இணைப்பில் பொருத்தி தண்ணீர்
பிடித்ததாக 70 மோட்டார்களை பறிமுதல் செய்தனர். மேலும் சோதனை தொடந்து
நடைபெறும்.
மின்மோட்டார் வைத்து தண்ணீர் எடுப்பதால், தெருக்களில் உள்ள பொதுக்
குழாய்களில் தண்ணீர் வரத்து குறைவாக உள்ளது என புகார் வந்துள்ளது.
எனவே குடிநீர் இணைப்பு பெற்றுள்ள அனைவரும், குழாயை வீட்டிற்கு வெளியே
வைக்கவேண்டும் எனவும், குழாயில் ப்ளோ கண்ட்ரோல் வால்வு பெருத்தவேண்டும்
எனவும் நகர்மன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
21 வார்டில் தற்போது 120 குடிநீர் இணைப்புகளுக்கு ப்ளோ கண்ட்ரோல்
வால்வு பொருத்தப்பட்டுவிட்டது. மற்ற வார்டுகளில் பொருத்தும் பணி நடைபெற்று
வருகிறது என அவர்கள் கூறினர்.