தினத்தந்தி 31.08.2013
திருச்செந்தூரில் ரூ.2¼ கோடி செலவில் புதிய சாலைகள் நகர பஞ்சாயத்து கூட்டத்தில் தீர்மானம்
நேற்று நடந்தது. நகர பஞ்சாயத்து தலைவர் மு.சுரேஷ்பாபு தலைமை தாங்கினார்.
செயல் அலுவலர் கொ.ராஜையா, துணைத் தலைவர் தொ.ராஜநளா ஆகியோர் முன்னிலை
வகித்தனர்.
கூட்டத்தில், திருச்செந்தூர் சன்னதி
தெருவில் ரூ.50 லட்சம் செலவில் சிமெண்டு சாலை, சந்தன மாரியம்மன் கோவில்
தெருவில் தொடங்கி சுப்பிரமணிய சுவாமி கோவில் வரை ரூ.27 லட்சம் செலவில்
சிமெண்டு சாலை, சபாபதிபுரம் தெருவில் ரூ.36 லட்சம் செலவில் தார் சாலை,
சபாபதிபுரம் தெருவில் சாலையின் இரு புறமும் ரூ.37 லட்சம் செலவில் சிமெண்டு
கான்கிரீட் கற்கள் பதித்தல்,
சன்னதி தெரு முதல் தாலுகா அலுவலகம் வரை
ரூ.45 லட்சம் செலவில் சிமெண்டு கான்கிரீட் கற்கள் பதித்தல், தாலுகா போலீஸ்
நிலையம் முன்புறம் மற்றும் துணைப்பதிவாளர் அலுவலகம் முன்பு ரூ.41 லட்சம்
செலவில் சிமெண்டு கான்கிரீட் கற்கள் அமைத்தல் என மொத்தம் ரூ.2 கோடியே 36
லட்சம் செலவில் புதிய சாலைகள் அமைப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு
தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.