மாலை மலர் 31.08.2013

சென்னை, ஆக. 31– ஆதார் அடையாள
அட்டைக்கான புகைப் படம் எடுக்கும் பணி சென்னை மாநகராட்சி பகுதியில் ஒவ்வொரு
வார்டாக எடுக்கப்பட்டு வருகிறது. முகப்பேர் மேற்கு, முகப்பேர் கிழக்கு
பகுதியில் நேற்று முதல் புகைப்படம் எடுக்கும்பணி தொடங்கி உள்ளது.
முகப்பேர்
91–வது வார்டு பகுதியில் எஸ்.பி.ஓ.ஏ. பள்ளி, பெண் பவுன்டேஷன் கட்டிடம்,
1–வது, 2–வது, 3–வது, 7–வது பிளாக், ஊராட்சி பள்ளிகளில் புகைப்படம்
எடுக்கப்படுகிறது.
முகப்பேர் மேற்கு, கிழக்கு பகுதி பொதுமக்கள்,
யஷ்வந்த் நகர், முகப்பேர் ஏரித் திட்டம், ரெட்டிப்பாளையம் பகுதி மக்கள்
அனைவரும் இங்கு புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம். 5 வயது குழந்தை முதல்
அனைவரும் புகைப்படம் எடுக்க தகுதியானவர்கள்.
இந்த முகாம் வருகிற 10–ந்தேதி வரை நடைபெறும் என்று கவுன்சிலர் பி.வி. தமிழ்ச்செல்வன் கூறினார்.