தினமணி 02.09.2013
தினமணி 02.09.2013
விதிமீறிய பேனர்கள் அதிரடியாக அகற்றம்
திருவள்ளூரில் விதிமுறை மீறி வைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் பேனர்களை நகராட்சி ஊழியர்கள் சனிக்கிழமை அகற்றினர்.
திருவள்ளூர் நகராட்சிப் பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறு
ஏற்படுத்தும் வகையில் அனுமதியின்றி விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதாக
மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவுக்கு ஏராளமான புகார்கள் வந்தன.
இதன்பேரில், நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள விளம்பர
பேனர்களை அகற்றும்படி நகராட்சி நிர்வாகத்துக்கு மாவட்ட ஆட்சியர்
உத்தரவிட்டார்.
இதனைத்தொடர்ந்து சனிக்கிழமை திருவள்ளூர் டவுன் போலீஸார் பாதுகாப்புடன்
திருவள்ளூர் ஜே.என்.சாலை, பஸ் நிலையம், ஆயில் மில், சி.வி.நாயுடு சாலை,
தேரடி உள்ளிட்ட பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த அரசியல் கட்சி பேனர்கள்,
தனியார் விளம்பர பேனர்கள் ஆகியவை அகற்றப்பட்டன.