தினமணி 04.09.2013
30-க்குள் தொழில் வரி செலுத்த வேண்டும்: மாநகராட்சி அறிவிப்பு
நடப்பு நிதியாண்டின் (2013-14) முதலாம்
அரையாண்டுக்கான சொத்து வரியை வரும் 30-ஆம் தேதிக்குள் செலுத்துமாறு
மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.
அந்த தேதிக்குள் தொழில் வரி செலுத்தாத நிறுவனங்கள் மீது சட்டப்படி
நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் அபராதமும் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை
விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாநகராட்சி வெளியிட்ட அறிவிப்பு:-
சென்னை
மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் உள்ள மத்திய மற்றும் மாநில அரசின்
கட்டுப்பாட்டில் இயங்கும் துறைகள், அரசு நிறுவனங்கள், தனியார் தொழில்
நிறுவனங்கள், தொழில்முனைவோர், தமிழக அரசுக்கு விற்பனை வரி செலுத்துபவர்கள்
ஆகியோர் நடப்பு நிதியாண்டின் முதலாம் அரையாண்டுக்கான தொழில் வரியை வரும்
30-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும்.
மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய தொழில் வரி ஏதேனும் நிலுவையில்
இருப்பின், அந்தத் தொகையும் சேர்த்து செலுத்த வேண்டும். வருவாய் அலுவலர்,
சென்னை மாநகராட்சி என்ற பெயரில் காசோலையாகவோ அல்லது வரைவோலையாகவோ
செலுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறது. நிர்ணயிக்கப்பட்ட காலக் கெடுவுக்குள்
தொழில் வரியை செலுத்தத் தவறினால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுவதுடன்
அபராதமும் விதிக்கப்படும்.