தினமணி 04.09.2013
தினமணி 04.09.2013
பேரூராட்சி வாகன ஓட்டுநருக்கு பரிசு
விபத்தின்றி வாகனம் ஓட்டிய மாமல்லபுரம் பேரூராட்சி வாகன ஓட்டுநருக்கு அரசு சார்பில் ஊக்கத்தொகை வழங்கி கெüரவிக்கப்பட்டது.
தமிழகத்தில் உள்ள பேரூராட்சிகளில், கடந்த 10 ஆண்டுகளாக பேரூராட்சி
அலுவலக வாகனங்களை விபத்தின்றி ஓட்டிய ஓட்டுநர்களுக்கு மாநில அரசு சார்பில்
ரூ.500 ஊக்கத் தொகை மற்றும் சான்றிதழ் வழங்கப்படுகிறது.
மாமல்லபுரம் பேரூராட்சியில், நெம்மேலியைச் சேர்ந்த என்.டி. முருகன் ,
செயல் அலுவலரின் வாகன ஓட்டுநராக பணிபுரிகிறார். இவர், கடந்த 10 ஆண்டுகளில்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகளில் விபத்தின்றி வாகனம்
ஓட்டியவர் என்ற பாராட்டை பெற்றுள்ளார்.
அவரது சேவையை பாராட்டி தமிழக அரசின் சார்பில் பேரூராட்சித் தலைவர்
எம்.கோதண்டபாணி ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழை என்.டி.முருகனுக்கு வழங்கி
கெüரவித்தார்.