தினத்தந்தி 19.09.2013
குற்றாலத்தில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி
குற்றாலம் நகர பஞ்சாயத்து சார்பில் மழைநீர் சேகரிப்பு மற்றும்
மரக்கன்றுகள் நடுதல் தொடர்பான விழிப்புணர்வு பேரணி நடந்தது. நகர பஞ்சாயத்து
தலைவி லதா அசோக்பாண்டியன் பேரணியை தொடங்கி வைத்தார். பேரணி மெயின் பஜார்
வழியாக முக்கிய வீதியில் வந்து பராசக்தி கல்லூரி முன்பு முடிவடைந்தது.
செங்கோட்டை சாலை தங்கும் விடுதி வளாகத்தில் 10 மரக்கன்றுகள் நடப்பட்டன.
பேரணியில் குற்றாலம் பராசக்தி வித்யாலயா பள்ளி மாணவ, மாணவிகள் சுமார் 800
பேர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் நிர்வாக அதிகாரி ஜீஜாபாய்,
கவுன்சிலர்கள் ஆனந்தி சுரேஷ், ஞானம், இசக்கி, பராசக்தி வித்யாலயா பள்ளி
தலைமை ஆசிரியர் வேலுசாமி, குற்றாலம் ஜெயலலிதா பேரவை இணை செயலாளர்
அசோக்பாண்டியன் மற்றும் அலுவலக பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள் கலந்து
கொண்டனர்.